Talk to Sales : +91 44 4854 5327

Talk to Sales : +91 44 4854 5327

HomeBlog Bigboss2 - Tamil

அறிந்ததும் அறியாததும்! தெரிந்ததும் தெரியாததும்!! #bigboss2 குறுஞ்செய்திகள்

Posted on July 10, 2018 by ராம்கி

#bigboss2. பெரிய எதிர்பார்ப்புடன் விஜய் டிவி மற்றும் கமல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தாலும், முதல் முறை பார்த்த #bigboss போல ஒரு பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே தோன்றவில்லை என்பதே பொதுவான கருத்து. பட்டித்தொட்டி எல்லாம் முதல் அத்யாயம் கலக்கி வந்தது, இந்த முறை பிஸுபிஸுத்து போனது என்றே சொல்லலாம். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை பார்த்த நிகழ்ச்சி, இன்று, சனி மற்றும் ஞாயிறு மட்டுமே பார்த்தால் போதும் என்று தோன்றுகிறது. போக போக நிகழ்ச்சி சூடு பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஒரு மனிதனின் நிழல் ரூபத்தை நிஜமாக்கும் #bigboss, இந்த முறை அதை நிரூபித்தும் காண்பித்துள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. தான் வெளியே செய்த சேட்டைகள் இங்கே இந்த #biggboss வீட்டில் தெரிய வாய்ப்பில்லை, நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்று கொள்வார்கள் என்று இந்த #biggboss2 போட்டியாளர்கள் நினைத்தாலும், ஊடகங்களில் இவர்கள் அந்தரங்க வாழ்க்கை அப்பட்டமாக இருப்பதால், போட்டியாளர்களின் முகமூடிகள் கிழிக்கப்படும் என்பதே பலரின் நம்பிக்கை.

ஒவ்வொரு போட்டியாளர்களும் தன்னுடைய சொந்த வாழ்க்கையை சரிசெய்து கொல்வதற்காகவே இந்த #bigboss2 நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக கூறியுள்ளது பெருமைப்படவேண்டிய விஷயம். உங்கள் பலருக்கும் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமல் இருக்கும் போட்டியாளர்கள் சிலரின் நிஜ முகமூடி, இங்கே உங்கள் கண்களுக்கு மட்டும் ஒரு சிறிய #குறும்செய்தியாக நாங்கள் தொகுத்துளோம்.

தொடர்ச்சியாக, கணவனை குறை சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு போட்டியாளர், தன்னுடைய மன நிம்மதிக்காக வேறு ஒரு உறவில் ஈடுப்பட்டிருந்த நேரத்தில், அது கணவனுக்கு தெரியவரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. விஷயம் தெரிந்த கணவன் கோபமடைந்ததால், தன் தவறை மறைக்க சிறு குழந்தை என்றும் பாராமல் தான் பெற்ற குழந்தையே ஒரு சாட்சியாக்கி இன்று ஊடகங்களில் தன்னை ஒரு நிரபராதி ஆக காட்டி கொள்ள துடிக்கும் போட்டியாளர்.

இறைவனின் பெயர் வைத்துக்கொண்டு, இவர் செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல. #biggboss2 வீட்டிற்குள் நுழையும் பொழுது ஜெண்டெல்மென் போல் நடந்து கொண்டாலும், சில நாட்களில் இவரின் சுயரூபம் தெரிய ஆரம்பித்துவிட்டது. இவருக்கு ஏற்கனவே ஒரு காதலி வெளியே காத்துக்கொண்டிருக்கையில், passtime என்ற பெயரில் #bigboss2 வீட்டின் உள்ளே ஒரு பெண்ணிடம் நெருக்கம் காட்டிக்கொண்டிருக்கிறார். இதுவும் TRP ஏற்றுவதற்கான ஒரு தந்திரமாக இருக்குமோ என்ற உங்களின் mindvoice எங்கள் காதிற்கும் கேட்கிறது.

நானும் காதலிக்கிறேன் என்ற பெயரில், ஒரு ஆண் மகனை தன்வசமாக்கி அவனுடன் சுதந்திரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஒரு போட்டியாளர். இவர், தன் உடம்பை தடிப்பாக காண வேண்டும், மற்றவர்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கவேண்டும் என்று தன் உடம்பை செயற்கை முறையால் தடிப்பாக உருமாற்றி நடமாடிக்கொண்டிருக்கிறார். உடம்பு என்ன பாவம் செய்ததோ மெலிந்து காண வேண்டும் என்று பல heroingal தவம் இருக்கும் காலத்தில், இப்படியும் இருக்கிறார்கள் ஒரு சிலர்.

தான் வயதிற்கு வரும் முன்னரே ஒரு சில கயவர்கள் தன்னை தனிமைப்படுத்தி கற்பழித்ததாக ஊடகங்களில் கூறி உள்ளது பெண்களுக்கிடையே அறியாமை பேயை ஒழித்து மனவலிமையை கொண்டு வர முயற்சித்து உள்ளது பெருமை. பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் தன்னை மற்றவர்களிடேயே ஒரு எளிய போட்டியாளராக சித்தரித்து உள்ளது மற்றவர்களின் பாராட்டை பெற்றுள்ளது. பலரும் வீட்டிற்குள் முகமூடி அணிந்தாலும், இவர் ஓர் அளவிற்கு உண்மையாகவும், இயல்பாகவும் தன்னை நடத்தி கொள்கிறார்.

இதுபோல் பல சுவாரஸ்யமான #குருஞ்செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.